தொழிற்சாலை தீ பாதுகாப்பு வடிவமைப்பும், வகைகளும்
(Fire Production System Design-FPSD & Types Of FPSD)
தீ பாதுகாப்பு வடிவமைப்பு (Fire Production System Design-FPSD):
தொழிற்சாலைகளை பாதுகாப்பதில் தீ பாதுகாப்பு
வடிவமைப்புகள் முக்கிய பங்குவகிக்கின்றது .
தீ பாதுகாப்பு வடிவமைப்பு (Fire Production System Design-FPSD) என்பது தீயைக் கண்டறிதல், தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தப் பயன்படும் வழிமுறைகளை உள்ளடக்கியதாகும். FPSD-யை பெஸ்டன் (Besten)நன்கு வடிவமைக்கின்றோம்.
தீ பாதுகாப் பு வடிவமைப்பின் முக்கிய அம்சங்கள்:
ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட தீ பாதுகாப்பு அமைப்பு என்பது,தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள், தொழிற்சாலையின் பொருட்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மேலும் சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்பே அதைக் கண்டறியவும் உதவுகிறது. தொழிற்சாலைகளை உருவாவுக்குதலில் தீ பாதுகாப்பு வடிவமைப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. அவைகள்,
· தீ கண்டறிதல்
· கட்டுப்படுத்துதல்
· அடக்குதல்
· அவசரகால அழைப்பு
1. தீ கண்டறிதல்(Fire detection:):
தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்துகளை கண்டறிய சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சென்சார்கள் வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் புகை அல்லது அதிக வெப்பநிலை இருப்பதை எச்சரிக்கை செய்து,விழிப்புடன் செயல்பட உதவுகிறது.
2. தீ கட்டுப்படுத்துதல்(Fire Containment):
தொழிற்சாலையில் ஏற்படும் தீயைக் கட்டுப்படுத்த தீ-எதிர்ப்பு சுவர்கள் (Fire-resistant walls) மற்றும் தீ-எதிர்ப்பு கதவுகள் (Fire-Resistant Doors)
உருவாக்கப்படுகிறது.
3.தீ அடக்குதல் (Fire Suppression):
இம் முறை தீயை அணைக்க நீர், நுரை அல்லது ரசாயனங்களைப் பயன்படுத்தி தீ பரவலை கட்டுக்குள் வைக்ககிறது.
4. அவசரகால பதில்(Emergency Response):
நன்கு வடிவமைக்கப்பட்ட தீ பாதுகாப்பு அமைப்பில், அவசர விளக்குகளும், எச்சரிக்கை ஒலி எழுப்பிகளும் அமைக்கப்படுகிறது .
தீ பாதுகாப்பு அமைப்புகளின் வகைகள்:
1. அலாரம் அமைப்புகள் (Fire Alarm Systems)
2. புகை கண்டறிதல் அமைப்புகள் (Smoke Detection Systems)
3. தானியங்கி தெளிப்பான் அமைப்புகள் (Automatic Sprinkler Systems)
4. வறட்சி அமைப்பு தெளிப்பான்கள் (Dry Pipe Sprinkler Systems)
5. கார்பன் டை ஆக்சைடு முகவர் அடக்கும் அமைப்புகள் (CO₂ Fire Suppression Systems)
6. சுத்தமான முகவர் அடக்கும் அமைப்புகள் (Clean Agent Systems)
7. நீர் மூடுபனி முகவர் அடக்கும் அமைப்புகள் (Water Mist Systems)
1. அலாரம் அமைப்புகள் (Fire Alarm Systems):
தீ பாதுகாப்பு கண்காணிப்பில் மிக முக்கியமான ஒன்று அலார அமைப்பு. இது தீ ஏற்படும் போது தானாகவே எச்சரிக்கை ஒலியை (அலாரம்) எழுப்பி தொழிலாளர்களை வெளியேற்ற இக்கருவி உதவுகிறது.இவற்றில் பல்வேறு வகையான சாதனங்களை பயன்படுத்த ஆலோசனையும் வழங்குகின்றோம் அவற்றில் சில,
- ஹீட் சென்சார்
- ஸ்மோக் சென்சார்.
2. புகை கண்டறிதல் அமைப்புகள் (Smoke Detection Systems):
இவை தீ பரவுவதற்கு முன் புகையை உணர்ந்து எச்சரிக்கை ஒலியை எழுப்ப உதவுகிறது .இவற்றில் முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன அவை,
- அயனி உமிழி கண்டறியும் கருவி (Ionization Smoke Detector):
இந்த கருவியில் ஒரு சிறிய அளவில் கதிரியக்கப் பொருள் (உதாரணம்: Americium-241) பயன்படுத்தப்படுகிறது. இது காற்றை அயனியாக்கி ஒரு மின்திறனை உருவாக்குகிறது. புகை உள்ளே வந்தால் அந்த மின்திறன் குறைவடைந்து அலாரம் ஒலியை எழுப்புகிறது
- ஒளியியல் புகை கண்டறியும் கருவி (Photoelectric Smoke Detector):
இக்கருவியில் புகை உள்ளே வந்தால், ஒளிக்கதிர் புகையின் மூலம் சிதறி உணரிக்கு (sensor) சென்று அலாரத்தை இயக்குகிறது.
3. தானியங்கி தெளிப்பான் அமைப்புகள் (Automatic Sprinkler Systems):
சிறிய அளவிலான தீயை உடனடியாக கட்டுப்படுத்த இது உதவுகிறது,மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் போது தானியங்கி தெளிப்பானில் குழாய்கள் தானாகத் திறக்கப்பட்டு நீர் வெளியேறப்படும்.
4. வறட்சி அமைப்பு தெளிப்பான்கள் (Dry Pipe Sprinkler Systems)
வறட்சி அமைப்பு தெளிப்பான்கள் (Dry Pipe Sprinkler Systems) என்பது தீ ஏற்படும் போது தானாகவே வேலை செய்யும் ஸ்பிரிங்க்ளர் கொண்ட அமைப்பாகும். ஆனால், இதில் முக்கியமான வேறுபாடு என்னவெனில் தண்ணீர் பொதுவாக குழாய்களில் இருக்காது , மாறாக காற்றோ அல்லது நைட்ரஜனோ நிரப்பப்பட்டிருக்கும்.
தீ ஏற்பட்டால்,அதனை உணர்ந்த ஸ்பிரிங்க்ளர் தலைபகுதி (Sprinkler Head) வெப்பத்தால் திறக்கப்பட்டு குழாய்களில்லிருந்து காற்று வெளியேறும்.மிகவும் குளிர்ச்சியான இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.உதாரணத்திற்கு ,
குளிர்பதனக் கூட தொழிற்சாலை (cold storage area).
மின்சாதனங்களை பாதுகாக்க, water-based sprinkler-க்கு மாற்றாக பயன்படுகிறது .
குளிர்ச்சியான இடங்களில் (குளிர்கால நாடுகள்), குழாய்கள் வெடிக்காமல் இருக்க ,இதை உபயோகிக்கப்படுகிறது .
5. கார்பன் டை ஆக்சைடு அணைப்பு ஊடக அமைப்புகள் (CO₂ Fire Suppression Systems):
தொழிற்சாலைகளில் தீ ஏற்பட்டால், உடனடியாக கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட்டு, ஆக்சிஜன் அளவை குறைத்து தீயை அணைக்கப்படுகிறது. இது புகை அல்லது வெப்பத்தை உணரும் சென்சார்கள் மூலம் செயல்பட்டு CO₂ சிலிண்டர்கள் இயக்கப்படுகிறது,பின்னர் CO₂ நோஸில்கள் மூலம் அதிவேகத்தில் வெளியேறி, ஆக்சிஜன் அளவை குறைக்கிறது.
6. சுத்தமான முகவர் அடக்கும் அமைப்புகள் (Clean Agent Systems):
தீயை அணைக்கும் போதும் தண்ணீர், தீ தடுப்புத் தூள் (Fire Retardant Powder), அல்லது தீ தடுப்பு நுரை(Fire Retardent Foam) போன்று எந்த பொருளையும் பயன்படுத்தாமல்,இயற்கைக்கு மாசுபாடே இல்லாமல் தீயை கட்டுப்படுத்தப் பயன்படும் பசுமை இல்ல வாயுக்கள் (Bio-Gas) அல்லது வாயுமயமாக்கப்பட்ட திரவங்களை பயன்படுத்துகிறோம்.
பெஸ்டன்(Besten)-ல் தீ பாதுகாப்பு வடிவமைப்பு (Fire Production System Design-FPSD):
தீ பாதுகாப்பு வடிவமைப்பை பெஸ்டன் (Besten) சிறந்த முறையில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைபதிலும் , ஆலோசனை நிபுணராகவும் செயல்படுகிறது.
.
Comments
Post a Comment